மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
x
வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை கடல் காற்று வீசி வருவதால் தென் தமிழக பகுதிகளில் மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னயை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்