கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம நபர்கள் : குற்றவாளி ஒருவர் கைது, இருவருக்கு போலீஸ் வலை வீச்சு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கல்லூரி மாணவியை , பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம நபர்கள் : குற்றவாளி ஒருவர் கைது, இருவருக்கு போலீஸ் வலை வீச்சு
x
மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருவெறும்பூர் துவாக்குடியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரி எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த போது , அங்கு வந்த மர்ம நபர்கள் நண்பரை தாக்கி விட்டு , மாணவியை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவி அலறவே , பயந்து போன மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனிடையே மாணவியின் நண்பர் துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் விசாரித்த போலீஸார், வாழவந்தான் கோட்டையை சேர்ந்த மணிகண்டனை கைது செய்தனர்.மேலும்  இருவரை தேடி வருகின்றனர்.
 

Next Story

மேலும் செய்திகள்