நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு வரை திருக்குறள் கல்வி : அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்க திட்டம்

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 12ஆம் வகுப்பு வரை திருக்குறள் கற்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாஜக முன்னாள் எம்.பி தருண்விஜய் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு வரை திருக்குறள் கல்வி  : அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்க திட்டம்
x
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 12ஆம் வகுப்பு வரை திருக்குறள் கற்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாஜக முன்னாள் எம்.பி தருண்விஜய் தெரிவித்துள்ளார். மதுரைக்கு வந்த அவர், தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தி, உருது, பஞ்சாபி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு புத்தகம் வழங்கப்படும் என்றார். திருக்குறள் கற்றுக் கொடுக்க, பல மாநிலங்கள் முன் வந்துள்ளதாக தெரிவித்த தருண்விஜய், திருக்குறளை பரப்பும் விதமாக 2 வது கட்ட திருக்குறள் பயணம் கரூரில் தொடங்கி காசியில் நிறைவு பெற இருப்பதாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்