"தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனவும் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்