காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழை : தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழை : தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு
x
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து ஆயிரம் கனஅடி வீதம் மொத்தம், 7 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை பொறுத்து, தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு இருக்கும் என அந்த அணைகளின் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, குடகு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்