கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் விளம்பரம் : பிராமணர் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுரை வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் மக்களை கவரும் வகையில் 'கும்பகோணம் ஐயர் சிக்கன்' என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் விளம்பரம் : பிராமணர் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
மதுரை வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் மக்களை கவரும் வகையில் 'கும்பகோணம் ஐயர் சிக்கன்' என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஆடி மாதத்தி​ முன்னிட்டு மக்களை கவரும் வகையில் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதனை அறிந்த பிராமணர் சங்க நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதை அறிந்த கடை நிர்வாகம் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்