ஆளில்லா விமானங்கள் மூலம் புகைப்பட ஆய்வு : காவிரி கரையோர பகுதிகளில் துவக்கம்...

நீர்நிலை பகுதிகளை ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி புகைப்பட ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
ஆளில்லா விமானங்கள் மூலம் புகைப்பட ஆய்வு : காவிரி கரையோர பகுதிகளில் துவக்கம்...
x
நீர்நிலை பகுதிகளை ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி புகைப்பட ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இப்பணியை மேற்கொள்வதற்காக, பேரிடர் மீட்பு மேலாண்மைத்துறை, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அருகே, காவிரி கரையோர பகுதியான தொட்டில் பட்டியில் ஆளில்லா விமானம் மூலம் புகைப்பட ஆய்வு மேற்கொள்ளும் பணி இன்று தொடங்கியது. வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக இப்பணி மேற்கொள்ள படுவதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்