110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டார் முதலமைச்சர்...

சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டார் முதலமைச்சர்...
x
சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை போக்க, நீர் மேலாண்மை இயக்கம், மக்கள் இயக்கமாக தொடங்கப்படும் என்றும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழுவை ஏற்படுத்தி இந்த இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்படும் இந்த இயக்கம் கிராம அளவிலும் ஒரு குழுவாக மக்கள் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். கோதாவரி மற்றும் காவிரியை இணைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர், மழைநீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் ஆயிரம் ரூபாயில் இருந்து, 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு, 50 லட்ச ரூபாய் செலவில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும், முதலமைச்சர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். நவம்பர் 1 ம் தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்