"அனல்மின் நிலையங்களை இயக்க நிலக்கரி தேவை" - மத்திய அமைச்சர்களிடம் நிலக்கரி வழங்க கோரிக்கை

அனல் மின் நிலையங்களை முழு திறனுடன் இயக்க, 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை முழுமையாக வழங்குமாறு மத்திய அரசுக்கு, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கோரியுள்ளார்.
அனல்மின் நிலையங்களை இயக்க நிலக்கரி தேவை - மத்திய அமைச்சர்களிடம் நிலக்கரி வழங்க கோரிக்கை
x
டெல்லி சென்ற அவர், மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன், நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல், எரிசக்தித் துறை இணை அமைச்சர் ஆர்.கே. சிங் ஆகியோரை சந்தித்தார். காற்றாலை மின்சார உற்பத்தி பற்றாக்குறையால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலக்கரியை முழுமையாக வழங்குமாறு கோரினார். இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் தினமும் அறுபத்து ஓராயிராம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், ஒப்பந்த அளவில் 60 சதவிகிதம் மட்டுமே வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி மனு அளித்துள்ளார். மொத்தமுள்ள 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துச் செல்ல தினமும் 20 ரேக்குகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்து மனுக்களை அளித்தார். கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்