சென்னையில் உள்ள 71,268 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தகவல்

சென்னையில் உள்ள ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 71,268 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தகவல்
x
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அதற்கு பதில் அளித்த பேசிய  முதலமைச்சர் பழனிசாமி,  சென்னையில், பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட 71268 ஆக்கிரமிப்புகளில், தற்போது வரை 14,400 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். , மீதமுள்ள ஆக்கிரமிப்புகளும் படிப்படியாக அகற்றப்படும் எனவும், பேரவையில் முதலமைச்சர்  பழனிசாமி அறிவித்துள்ளார். அகற்றப்படும் வீடுகளில் வசிப்போருக்கு மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டி உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.  பொதுப்பணி்த்துறையின் கீழ், 14 ஆயிரத்து 098 ஏரிகள் உள்ளன எனவும், ஏரிகளை முறையாக பராமரிக்கவும், ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர்  பழனிசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்