குடிநீர் வழங்கக் கோரி திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருமங்கலம் அருகே 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ​பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கக் கோரி திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
x
திருமங்கலம் அருகே 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ​பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைக்குடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடந்த 6  மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து, அப்பகுதி பெண்கள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்