நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் , அன்புமணி ராமதாஸ் நாளை வேட்பு மனுத்தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் , அன்புமணி ராமதாஸ் நாளை வேட்பு மனுத்தாக்கல்
x
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், அதிமுக மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு வழங்கப்பட்ட ஒரு இடத்தில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மூவரும் சட்டப்பேரவை செயலாரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். வரும் 9-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை  நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்