போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது - ரவி, ஏ.டி.ஜி.பி.

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக காவல்துறையில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆம் நிலை காவலர்களுக்கான 6 மாத பயிற்சி நிறைவு விழா காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.
x
விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக காவல்துறையில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆம் நிலை காவலர்களுக்கான 6 மாத பயிற்சி  நிறைவு விழா  காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. ரவி, போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது என்றும், மக்களின் சேவகனாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  

Next Story

மேலும் செய்திகள்