குளம் தூர்வாரும் பணியை பூஜை செய்து பணியை தொடங்கிய மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே குளம் தூர்வாரும் பணியை பொதுமக்கள் ஆர்வத்துடன் தொடங்கி உள்ளனர்.
குளம் தூர்வாரும் பணியை பூஜை செய்து பணியை தொடங்கிய மக்கள்
x
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே, குளம் தூர்வாரும் பணியை, பொதுமக்கள் ஆர்வத்துடன் தொடங்கி உள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் சோழி பொய்கை குளம் உள்ளது. விவசாயிகளின் முக்கிய நீர்ஆதாரமாக விளங்கிய இந்த குளம்,  கடந்த 30 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் முட்செடிகள் வளர்ந்து வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் இதனை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அதற்கு அனுமதி அளித்துள்ளார்.இதையடுத்து, குளத்தின் கரையில் மண்வெட்டி மற்றும் கடப்பாறை வைத்து வாஸ்து பூஜை செய்து விவசாயிகளும், பொதுமக்களும் தூர்வாரும் பணியினை தொடங்கி உள்ளனர். இந்த குளத்தை சீரமைத்தால் 60 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்