தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழக மலை மாவட்டத்தில் மழை இல்லாத சூழல் நிலவி வந்த நிலையில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்