கண்மாயை தூர்வாரியதாக அதிகாரிகள் மோசடி - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

வேப்பலோடை கண்மாயை தூர்வாரியதாக கணக்கு காண்பித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 17 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
x
தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கிராமத்தில் உள்ள கண்மாயை தூர்வார கோரி, கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் கண்மாய் ஏற்கனவே தூர்வாரப்பட்டதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது. வேப்பலோடை கண்மாயை தூர்வாரியதாக கணக்கு காண்பித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 17 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மழைக்காலம் தொடங்கும் முன் கண்மாயை தூர்வார வேண்டும்  என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்