சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பிவிட வேண்டும் - தயாநிதி மாறன்

சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருப்பிவிட அரசு முன்வர வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
x
தண்ணீர் பிரச்சினையை தடுக்க, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி. தயாநிதிமாறன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள சேகர்பாபு எம்எல்ஏ அலுவலகத்தில்  பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், திமுக எம்.பி. தயாநிதிமாறன் பங்கேற்று, 214 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருப்பிவிட அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்