"தேசிய கல்விக் கொள்கையை ஏற்கக்கூடாது" - கல்வியாளர்கள் கருத்தரங்கில் தீர்மானம்

தேசிய கல்விக்கொள்கை 2019 குறித்து கடலூரில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கக்கூடாது - கல்வியாளர்கள் கருத்தரங்கில் தீர்மானம்
x
தேசிய கல்விக்கொள்கை 2019 குறித்து கடலூரில் கருத்தரங்கம் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறைகள், நிறைகள் குறித்து பேசப்பட்டன. இந்திய கல்வியின் இருண்டகாலம் என்ற தலைப்பில் தேசிய கல்வி கொள்கை வரைவு பற்றிய கட்டுரை புத்தகம் வெளியிடப்பட்டது. கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஆயிஷா நடராஜன், மார்க்ஸ் உள்ளிட்டவர்களின் கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருந்த நிலையில் இந்த கருத்தரங்கில் தேசிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநில உரிமைகளை பறிக்கும் விதத்தில் இந்த கல்விக் கொள்கை உள்ளதாகவும், கல்வியை வணிகமாக்கும் முறையில் இது உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தி மற்றும் சமஸ்கிருத்தை திணிக்கும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கையை ஏற்க கூடாது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்