"அரசுக்கு கவலையில்லை" - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு - அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம்

சென்னை உள்பட நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி பாதிக்கப்படுவார்கள் என நிதி ஆயோக் அமைப்புக்கு தெரிந்துள்ளது, மத்திய மற்றும் தமிழக அரசுக்கு தெரியாமல் உள்ளதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.
அரசுக்கு கவலையில்லை - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு - அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம்
x
சென்னை உள்பட நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி பாதிக்கப்படுவார்கள் என நிதி ஆயோக் அமைப்புக்கு தெரிந்துள்ளது, மத்திய மற்றும் தமிழக அரசுக்கு தெரியாமல் உள்ளதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார். மக்களவையில், இன்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் உள்ள மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் அக்கறை, ஆளும் உங்கள் கூட்டணி அரசான அ.தி.மு.க.வுக்கு இல்லை என குற்றம்சாட்டினார். மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்ட போது, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த தி.மு.க. அரசுக்கு உதவியதை சுட்டிக்காட்டினார். தி.மு.க. அரசு திட்டமிட்ட கடல்​நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை, அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி இருந்தாலே, இன்று தமிழகம் தண்ணீர் பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை இருந்திருக்காது என்றும், தமிழகத்தை ஆளும் அரசு ஊழல் அரசு என்றும் தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. உறுப்பினர் ரவிந்திரநாத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.க்களும் கோஷம் எழுப்பியதால் அவையில் பரபரப்பு உருவானது.

Next Story

மேலும் செய்திகள்