சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை : வேலுமணி

சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை : வேலுமணி
x
சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் உள்ள மாகரல் குடிநீர் நீரேற்று நிலையத்தை அமைச்சர் வேலுமணி ஆயுவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,விவசாய ஆழ்துளை கினறுகளில் இருத்து ஏற்கனவே எடுப்பதைவிட கூடுதலாக 8 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை மேற்கொண்டு வரப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் வேலுமணி, அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி நீர் வினியோகம் செய்யப்படுகிறது என்றார். மேலும் , குடிநீர் வினியோகம் இல்லாததால் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை என்றும் அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார். செயற்கை மழை பொழிய வைப்பது குறித்து ஆய்வு நடத்தப்படுவதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்