ஓசூர் : அரசு தொடக்க பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை

தனியார் பள்ளி மீதான மோகம் காரணமாக ஓசூர் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.
ஓசூர் : அரசு தொடக்க பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை
x
ஒசூர் அருகே கெலமங்களம் மற்றும் தளி வட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசு ஊராட்சி பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இதுபோல, தாசனபுரம், மல்லேபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தொடக்க பள்ளிகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த அரசு துவக்கப்பள்ளிகள் அனைத்திலும் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. தனியார் பள்ளிகள் மீதான மோகம், வேலைவாய்ப்புக்காக கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம்பெயம் மக்கள் உள்ளிட்டவை மாணவர் சேர்க்கை குறைய காரணங்களாக கூறப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகளை ஒன்றினைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்