அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் : தமிழக மேற்கு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் : தமிழக மேற்கு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
x
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த தாழ்வு நிலை, அடுத்த 48 மணிநேரத்தில் தென்கிழக்கு, கிழக்கு மத்திய பகுதிகளில் நகர்ந்து வருகிறது. இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதியில் நகர்ந்து புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் லட்சத்தீவு, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதிய புயல் சின்னத்தால், கடலோர கர்நாடகா, கோவா, அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் அடுத்த 3 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்