ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு : 6,000 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அமல்

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவேடு திட்டம் இன்று தொடங்கியது.
ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு : 6,000 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அமல்
x
அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை, விடுமுறை அதிகமாக எடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், வழக்கமான வருகை பதிவேடு முறைக்கு மாற்றாக, பயோமெட்ரிக் முறையிலான வருகை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகிறார்களா, இல்லையா என்பது குறித்து கண்காணிக்கப்படும் என,  பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டம் பள்ளிகள் தொடங்கிய இன்றே நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து இம்மாத இறுதிக்குள் நடுநிலைப்பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்