ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரிக்கை : குளம், பருத்தி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மன்னார்குடி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரிக்கை : குளம், பருத்தி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x
கீழப்பாலம், நெம்மேலி உள்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. கீழப்பாலத்தில் குளத்தில் இறங்கிய விவசாயிகள், மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். அதேபோல், நெம்மேலி பகுதி விவசாயிகள் பருத்தி வயலில் இறங்கி போராட்டம் மேற்கொண்டனர். சுமார் 13க்கும் மேற்பட்ட கிராமமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டு விடும் என அவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, வேதாந்தா, ஓ.என்.ஜி.சி, பன்னாட்டு  நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.  

Next Story

மேலும் செய்திகள்