நாமக்கல் மண்டலத்தில் 12 கோடி முட்டைகள் தேக்கம்
நாமக்கல்லில் சுமார் 12 கோடி முட்டைகள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல்லில் சுமார் 12 கோடி முட்டைகள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்து 100 பண்ணைகள் மூலம் நாள்தோறும் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது கோடை காலம் மற்றும் பள்ளி விடுமுறை என்பதால் ஏராளமான முட்டைகள் பண்ணைகளில் தேங்கி வருகின்றன. நாமக்கல் மண்டலத்தைக் காட்டிலும், ஆந்திரா, கர்நாடகாவில் குறைந்த விலைக்கு முட்டைகள் கிடைப்பதால் வியாபாரிகள் அங்கு கொள்முதல் செய்வதாகவும் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். எனவே முட்டை விலையை குறைக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story