கோடை பாரம்பரிய கண்காட்சி - மண்பாண்ட பொருட்களை செய்து பழகிய சிறுவர்கள்

சென்னையில் நடைபெற்ற கோடை பாரம்பரிய திருவிழாவில், இயற்கை உணவுகள் பற்றிய கண்காட்சி இடம்பெற்றது.
x
சென்னையில் நடைபெற்ற கோடை பாரம்பரிய திருவிழாவில், இயற்கை உணவுகள் பற்றிய கண்காட்சி இடம்பெற்றது. விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரசாயனம் கலக்காமல் இயற்கை பொருட்களை கொண்டு தயாரித்த உணவு வகைகள், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன. மண்பாண்டங்களில் குக்கர், தண்ணீர் குவளை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை நேரடியாக தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. மண்பாண்ட பொருட்களை செய்வது குறித்து சிறுவர், சிறுமியர்களுக்கு கற்றுத்தரப்பட்டது. மேலும் குழந்தைகள் மணலில் விளையாடினால் ஆடைகள் மட்டுமே அழுக்காகும், செல்போனில் விளையாடினால் குழந்தையே அழுக்காகும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 50 வகையான பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு வகைகள், தானியங்கள், சிறு தானியங்கள், செக்கு எண்ணெய், பனங்கிழங்குகள், கீரை வகைகள், துணிகள் என கண்காட்சியில் இடம்பெற்ற பொருட்களை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான விதைகளும், செடிகளும் விற்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்