தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆயிரம் கிலோ பூக்களால் பூச்சொரிதல் விழா

தஞ்சாவூர் பெரியகோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு ஆயிரம் கிலோ பூக்களால் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆயிரம் கிலோ பூக்களால் பூச்சொரிதல் விழா
x
தஞ்சாவூர் பெரியகோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு ஆயிரம் கிலோ பூக்களால் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பருவ மழை வேண்டி நடைபெற்ற இந்த பூஜையில் ரோஜா, முல்லை, மல்லி, தாமரை, மகிழம், தாழை உள்ளிட்ட பல்வேறு விதமான ஆயிரம் கிலோ மலர்களால் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்று சிறப்பு தீபாராதனையும் காட்டப்பட்டது.முன்னதாக பெரியகோயில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களால் வழங்கப்பட்ட பூக்களை நால்வர் சன்னதியிலிருந்து ஏராளமானோர் ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

ஏழுமலையான் கோயிலில் வைகாசி மாத திருவிழா



திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகாசி மாத பெளர்ணமியையொட்டி  தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என மனம் உருகி வேண்டி கொண்டனர்.

முழு நிலவு திருநாளை ஒட்டி புத்த பூர்ணிமா விழா 



சென்னை செங்குன்றம் அருகே  முழு நிலவு திருநாளை ஒட்டி புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது .பாடியநல்லூர் பகுதியில் புகழ்பெற்ற புத்தர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு பவுர்ணமி திருநாளை புத்தபூர்ணிமா திருநாளாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 2 ஆயிரத்து 563 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா நடைபெற்றது. பக்தர்கள் பழ வகைகள் கொண்ட சீர்வரிசை கொண்டுவந்து போதி மரத்தடியில் வைத்து அம்மரத்திற்கு நீரூற்றி வழிபட்டனர். பின்னர் 12 அடி உடைய புத்தர் சிலைக்கு மலர்கள் தூவி தீபங்கள் ஏற்றி சிலையை சுற்றி வலம் வந்து புத்தரை வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்