தொழிலதிபர்களை மிரட்டி பல லட்சம் ரூபாய் வசூல் - அதிமுக பிரமுகர் கைது
பதிவு : மே 13, 2019, 02:29 PM
சென்னை தண்டையார்பேட்டையில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்த அறிவழகன் அப்பகுதி அதிமுக வட்ட பொருளாளர்.  இந்நிலையில் தண்டையார் பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் புதியதாக வீடு கட்டுபவர்களிடமும் தொழிற்சாலை தொடங்குபவர்களிடமும் அவர் மிரட்டி பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனம் தண்டையார் பேட்டையில் புதிய கிளையை தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த ஹோட்டல் உரிமையாளர் அறுமுகசாமியை தொடர்பு கொண்டு பேசிய அறிவழகன், 75 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால், புதிய கிளையை திறக்க விடமாட்டேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆறுமுகசாமி அளித்த புகாரின் பேரில் அறிவழகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த மூன்றாண்டுகளாக சென்னை  முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை உள்ள பெரிய பெரிய நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலித்திருப்பது விசாரணையில்தெரியவந்தது. அறிவழகனின் சகோதரர் காவல்துறையில் பணியற்றி வருவதால்,  அவர், காவலர் குடியிருப்பில் தங்கிக்கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

906 views

பிற செய்திகள்

பாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு

திருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

13 views

இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..!

மதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

12 views

மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

31 views

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.

24 views

மோடி பிரதமராக இந்திய அளவில் தீர்ப்பு - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

23 views

ஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு

வரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.