11, 12ம் வகுப்பில் தமிழ் - ஆங்கிலம் ஆகிய 2ல் ஒரு பாடம் - வரும் கல்வியாண்டு முதல் அமல்?
பதிவு : மே 10, 2019, 03:53 PM
11 மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிப்பாடங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும் முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.
பொதுத்தேர்வுகளில் மீண்டும் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 9 மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களில் இரு தாள்களுக்கு பதிலாக ஒரே தாள் தேர்வு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது, 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 பாடங்களும் தலா இரண்டு தாள்கள் தேர்வு எழுதும் முறை உள்ளது. இதை ஒரே தாளாக மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதேப்போல 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரு மொழிப் பாடங்களுக்கு பதிலாக ஒரே மொழிப்பாடம் தேர்வு செய்யும் முறையை அமல்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை பரிந்துரை செய்துள்ளது. இது அமலுக்கு வரும்பட்சத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஒரு மொழிப்பாடத்தை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம். இதனால் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக மாற்றம் பெறும் என்றும் பாடத்துக்கு 100 மதிப்பெண் வீதம் 600 ஆக உள்ள மொத்த மதிப்பெண் அளவு இனி 500 மதிப்பெண் ஆக மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த பரிந்துரை தொடர்பாக முழுமையான ஆய்வுக்குப் பிறகு வரும் கல்வி ஆண்டில் இவற்றை தமிழக அரசு அமல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

956 views

பிற செய்திகள்

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

109 views

"சென்னையில் கனமழை பெய்யும்" - செல்வகுமார், வானிலை ஆர்வலர்

"வடமேற்கு திசை நோக்கி காற்று சுழற்சி நகர்கிறது"

309 views

சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி

சேலத்தில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

15 views

இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.

11 views

தமிழக கராத்தே வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் - ஜோபோர் ஹர்ஸ்பட்டாகி

தமிழக கராத்தே வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் என பிரபல கராத்தே வீரர் ஜோபோர் ஹர்ஸ்பட்டாகி கூறியுள்ளார்.

24 views

மானாம்பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து காரைக்கால் மானாம்பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று துவங்கப்பட்டது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.