பெற்றோரை மீறி நகராட்சி ஆணையர் திருமணம்...வீட்டை முற்றுகையிட்ட பெண் வீட்டார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜியும், நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் ரோஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பெற்றோரை மீறி நகராட்சி ஆணையர் திருமணம்...வீட்டை முற்றுகையிட்ட பெண் வீட்டார்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி ஆணையர்  செல்வ பாலாஜியும், நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் ரோஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்த திருமணத்தை ஏற்க மறுத்த செல்வ பாலாஜியின் தாயார், தனது மகனை,  பெண் வீட்டார் கடத்திவிட்டதாக குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன், செல்வ பாலாஜியை மட்டும், வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதை அறிந்த ரோஜா, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், செல்வ பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செல்வ பாலாஜி வீட்டில் இருக்கும் பொழுது  எப்படிக் கடத்தி விட்டதாக பொய் புகார் அளிக்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், ரோஜாவை வீட்டில் சேர்க்குமாறு வலியுறுத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார், சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மனைவி ரோஜாவை, 2 நாட்களில் வீட்டிற்கு அழைத்து செல்வதாக ஆணையர் செல்வபாலாஜி உறுதி அளித்ததை அடுத்து, ரோஜாவின் குடும்பத்தினர்  கலைந்து சென்றனர். 
 

Next Story

மேலும் செய்திகள்