தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது - வாசன் கருத்து

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தும், பா.ஜ.க. வளர்ச்சி அடைந்தும் வருவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது - வாசன் கருத்து
x
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர்கள் விடுப்பட்டதற்கு, தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார். பெருகி வரும் பாலியல் குற்றங்களை தடுக்க, தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கினால் அதனை த.மா.கா. வரவேற்கும் என்றும், உள்ளாட்சி தேர்தலிலும், தங்கள் கூட்டணி தொடரும் எனவும் வாசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்