பெரியாண்டிச்சி, ஐயனாரப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

தீர்த்தக்குட ஊர்வலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பெரியாண்டிச்சி, ஐயனாரப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம்
x
சேலம் மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய முத்தியம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி, ஐயனாரப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் நாளை நடைப்பெறுகிறது.இதனை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நீராடி தீர்த்தம் எடுத்துக்கொண்டு முக்கிய கிராமங்களின் வழியாக பெரியமுத்தியம்பட்டி கோவிலை வந்தடைந்தடைந்தனர். இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

 சுவாமி மலை கோவிலில் சித்திரை தேரோட்டம்



கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் சித்திரை திருவிழா கடந்த 8  நாட்களாக  நடைபெற்று வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று முருகர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சாமி தரிசனம்



கோவை மாவட்டம் பேரூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. ஏழு மலைகளுக்கு மேல் கிரிமலையில் சுயம்புவாய் அருள் பாலிக்கும் வெள்ளியங்கரி ஆண்டவரை தரிசிக்க நான்கு மாதங்கள் மட்டுமே பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளிக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி ஆண்டவருக்கு பால், தயிர்,சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடந்த வாரத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பங்கேற்பு 



அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் உள்ள  வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்  சிறப்பாக நடைபெற்றது.  கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோயில் திருவிழா தொடங்கியது. இதையொட்டி பெருமாள் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Next Story

மேலும் செய்திகள்