தமிழகத்தில் நடைபெற்ற 18 இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு சதவீதம்

தமிழகத்தில் நடைபெற்ற 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி 71 புள்ளி 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளள.
தமிழகத்தில் நடைபெற்ற 18 இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு சதவீதம்
x
பூந்தமல்லி தொகுதியில் 79.17 சதவீத வாக்குகள் பதிவாகின,இதே தொகுதியில் 2016ம் ஆண்டு 76.06 சதவீத வாக்குகள் பதிவாகின.பெரம்பூரில் 61.06 சதவீத வாக்குகள்,2016ம் ஆண்டில் 65.01 சதவீத வாக்குகள் பதிவாகின.திருப்போரூர் 81.05 சதவீத வாக்குகள்,2016ம் ஆண்டில் 79.06 சதவீத வாக்குகள் பதிவாகின.சோளிங்கரில் இந்த ஆண்டு  79.63 சதவீதமும், 2016ம் ஆண்டில் 82.04 சதவீத வாக்குகள் பதிவாகின.குடியாத்தம் தொகுதியில் 81.79 சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 74.18 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.ஆம்பூர் தொகுதியில்  76.35  சதவீத வாக்குகளும்,2016ம் ஆண்டில் 75.92 சதவீத வாக்குகளும் பதிவாகின.ஓசூரில் தற்போது 71.29  சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 71. 21 சதவீத வாக்குகளும் பதிவாகின.பாப்பிரெட்டிபட்டியில் தற்போது 83.31 சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 85.84 சதவீத வாக்குகளும் பதிவாகின. அரூரில் தற்போது 86.96 சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 84.36 சதவீத வாக்குகளும் பதிவாகின.நிலக்கோட்டை தொகுதியில் தற்போது 85.50 சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 79.87 சதவீத வாக்குகளும்பதிவாகியுள்ளன.திருவாரூர் தொகுதியில் தற்போது 77.38 சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 77.78 சதவீத வாக்குகளும் பதிவாகின.தஞ்சையில் தற்போது 66.10 சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 69 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.மானாமதுரையில் தற்போது 71.22 சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 72.74 சதவீத வாக்குகளும் பதிவாகின.ஆண்டிப்பட்டி தொகுதியில்  தற்போது 75.19 சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 78.3 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.பெரியகுளம் தொகுதியில் தற்போது 64.89  சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 75.06 சதவீத வாக்குகளும்,சாத்தூரில் தற்போது 60.87 சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 78.31 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.பரமக்குடியில் தற்போது 73.69 சதவீத வாக்குகளும்,  2016ம் ஆண்டில் 68.77 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.விளாத்திகுளத்தில் தற்போது 78.06 சதவீத வாக்குகளும், 2016ம் ஆண்டில் 74.29 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதியில் தற்போதைய இடைத்தேர்தலில் 77.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்