டாஸ்மாக் கடைகளை மூடினால் வரும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சை பள்ளியக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க கோரி மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
x
இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது , டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.உச்சநீதிமன்ற 
உத்தரவையடுத்து தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் முடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.2004 ஆம் ஆண்டு  7ஆயிரத்து 896 டாஸ்மாக்  கடைகள் இருந்த நிலையில் அவை  தற்போது 5 ஆயிரத்து 239 டாஸ்மாக் கடைகளாக குறைக்கப்பட்டுள்ளதாக  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த பதில் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளை மூடினால் வரும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய வரிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.தமிழக அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் அது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்