சேலம் : கொடுத்த கடன் திரும்ப கிடைக்காததால் விபரீத முடிவு - மூவர் தற்கொலை

கொடுத்த கடன் திரும்ப வராததால், வறுமையில் வாடிய தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் : கொடுத்த கடன் திரும்ப கிடைக்காததால் விபரீத முடிவு - மூவர் தற்கொலை
x
சேலம் குகை பகுதியில் மனைவி, மகனுடன் வசித்து வந்த சிவராமன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகன்கள். ஒருவர் திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில், கண்பார்வையில்லாத பாபு என்ற மகனை பாதுகாத்து வந்தனர். பகுதி நேரமாக ஃபைனான்​ஸ் தொழில் செய்து வந்த சிவராமன், பலருக்கு பணத்தை கடனாக கொடுத்துள்ளார். 

பணத்தை வாங்கியவர்கள், அதனை திருப்பி தர மறுத்து,  ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதால், சிவராமன் குடும்பத்தினர் மன உளைச்சல், அடைந்ததாக கூறப்படுகிறது. 
சொற்ப வருமானத்தில் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்ட நிலையில், 4 லட்ச ரூபாயை கடனாக பெற்ற உறவினர், 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்துள்ளார். 

இதனால் மனமுடைந்த சிவராமன், மற்றும் அவரது மனைவி மற்றும் மகன், தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த, அக்கம் பக்கத்தினர், உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மூன்று பேரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக, செவ்வாய்பேட்டை போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட சிவராமனின் மூத்த மகன் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகசண்முகராஜ் மற்றும் குகை பகுதியைச் சேர்ந்த பத்மினி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்களிடம், பணத்தை, திரும்ப பெற முடியாமல்,  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்