கோவை சிறுமி கொலை வழக்கு - பாலியல் வன்கொடுமை செய்தவரிடம் விசாரணை
பதிவு : மார்ச் 31, 2019, 03:52 PM
மாற்றம் : மார்ச் 31, 2019, 04:22 PM
கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 6 நாட்களுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கோவை துடியலூர் பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25ம் தேதி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.இதனையடுத்து காணாமல் போன சிறுமி 26ம் தேதி அவரது வீட்டின் அருகேயுள்ள குறுக்கு சந்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பின்னர் நடைபெற்ற பிரேத பரிசோதணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து
13 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில், கொலை நடந்து 6 நாட்களுக்கு பிறகு உலியம்பாளையம் பகுதியை சேர்ந்த  சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.அடிக்கடி பன்னிமடை கிராமத்துக்கு வரும் சந்தோஷ்குமார் அந்த சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.சந்தோஷ் குமாரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனது மகன் தவறு செய்யவில்லை - சந்தோஷ்குமாரின் தந்தை

சம்பவம் நடந்த அன்று தனது மகன், தன்னுடன் வீட்டிலேயே இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமாரின் தந்தை தெரிவித்துள்ளார். தனது மகன் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


பிற செய்திகள்

சேறும் சகதியுமாக மாறிய திருமழிசை சந்தை - வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள்

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தையானது, தற்போது பெய்த சிறிய மழைக்கே சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

18 views

போலியாக பதிவு சான்றிதழ் தயாரிப்பு - அரசு அலுவலக ஊழியர்கள் 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பழைய வாகனங்களுக்கு போலியாக பதிவு சான்றிதழ் தயாரித்த மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

44 views

கூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுத்த இளைஞர் - ஐ போன் நழுவியதால் இளைஞர் ஆற்றில் தவறி விழுந்தார்

சென்னை கூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த சதீஷ் என்பவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

78 views

"தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தும் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல்" - தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தும் கூட, கொரோனா சிகிச்சைக்கு பல தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக தி.மு.க எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

65 views

தனியார் மருத்துவமனைகளில் PCR சோதனை கட்டணம் குறைப்பு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தனியார் மருத்துவமனைகளில் கொரனா தொற்றை உறுதிபடுத்த செய்யப்படும் PCR சோதனைக்கான கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

231 views

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு வைரசின் வீரியம் அதிகம் - இருமுறை கொரோனா சோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டம்

வெளிமாநிலத்தில் இருந்து கொரோனோ தொற்றுடன் வரும் நோயாளிகள் பலருக்கு வைரசின் வீரியம் அதிகம் இருப்பதால், மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர், இருமுறை கொரோனா சோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.