பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
x
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் தலா 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்றும்,சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் 28 லட்ச ரூபாய் வரை செலவிடலாம் என கூறப்பட்டுள்ளது.இது தவிர, வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது பயன்படுத்த கூடிய பொருட்களுக்கான விலை பட்டியலையும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.அதன் படி,மட்டன் பிரியாணி 200 ரூபாய், சிக்கன் பிரியாணி 180 ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என, ஆணையம் நிர்ணயித்துள்ளது.இதே போல காலை உணவிற்கு 100 ரூபாய் என்றும் தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் என்றும் தொப்பி பனியன் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து பட்டியலை வெளியிட்டுள்ளது.இதே போல்,  வெஜிடபுள் பிரியாணிக்கு 100 ரூபாய், மதிய உணவுக்கு 100 ரூபாய், குளிர்பானங்களுக்கு 75 ரூபாய், இளநீருக்கு 40 ரூபாய்,பொன்னாடைக்கு 150 ரூபாய்,தொழிலாளர்களுக்கான செலவு 8 மணி நேரத்திற்கு 450 ரூபாய், பட்டாசுக்கு 600 ரூபாய் மண்டபத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் முதல், ஆறாயிரம் ரூபாய், மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஏசி அறைகளுக்கு ஒன்பதாயிரத்து 300 ரூபாயும், 3 நட்சத்திர ஓட்டல் ஏசி அறைகளுக்கு 5 ஆயிரத்து 800 ரூபாயும் நிர்ணயித்து தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்