நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் பொள்ளாச்சி பெண்களுக்கு இல்லை

ஊரகப்பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து
நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் பொள்ளாச்சி பெண்களுக்கு இல்லை
x
டெல்லி நிர்பயாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பொள்ளாச்சி பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என பட்டுக்கோட்டையை சேர்ந்த சாம்பசிவம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, நகரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஊரகப் பகுதிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்றனர்.மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விபரங்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்