"5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு கூடாது" - ஸ்டாலின்

மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு கூடாது - ஸ்டாலின்
x
மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி வருவதாக குறிப்பிட்டார். அரசாணை இன்றி, ஒரு கொள்கை முடிவு எடுக்காமல் எப்படி பொதுத்தேர்வு நடத்த முடியும் என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையை மாணவர்கள் மீது திணிப்பது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது என விமர்சித்தார். கல்வியாளர்கள் உள்பட யாரிடமும் கலந்தாலோசிக்காமல் அரசு எடுத்த முடிவால் மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பதாக அவர் கூறினார். 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்