முதலமைச்சருடன் ரஜினிகாந்த் சந்திப்பு : மகளின் திருமணத்திற்கு நேரில் அழைப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார்.
முதலமைச்சருடன் ரஜினிகாந்த் சந்திப்பு : மகளின் திருமணத்திற்கு நேரில் அழைப்பு
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, தனது மகள் சவுந்தர்யாவின் திருமண அழைப்பிதழை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா - விஷாகன் திருமணம் நாளை, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்