இல்லாதவருக்கு உதவும் "மகிழ்ச்சியின் சுவர்" : மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு
பதிவு : பிப்ரவரி 06, 2019, 06:27 PM
பெரம்பலூரில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், "மகிழ்ச்சியின் சுவரை", மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
பெரம்பலூரில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், "மகிழ்ச்சியின் சுவரை", மாவட்ட ஆட்சியர்  திறந்து வைத்தார். இங்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்திய பழைய உடைகள், புத்தகங்கள், ஸ்கூல் பேக், காலணி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறுகின்றன. இவற்றை பொதுமக்கள் தாமாக முன்வந்து வழக்குவதன் மூலம், இல்லாதவர்கள் இந்த பொருட்களை கொண்டு பயன்பெற வாய்ப்பு அமைகிறது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.