ஊருக்குள் சுற்றித் திரியும் 'சின்னத் தம்பி' யானை - இரண்டு நாட்களில் பிடித்து விடுவதாக வனத்துறை உறுதி

கோவையில் ஊருக்குள் சுற்றித் திரியும் சின்னத் தம்பி என்ற காட்டு யானையை பிடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
ஊருக்குள் சுற்றித் திரியும் சின்னத் தம்பி யானை - இரண்டு நாட்களில் பிடித்து விடுவதாக வனத்துறை உறுதி
x
கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான கனுவாய், தடாகம், சின்னத் தடாகம் மற்றும் பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை இரண்டு காட்டு யானைகள் சேதப்படுத்தி வந்தன. விநாயகம், சின்னத் தம்பி என பெயரிடப்பட்ட அந்த யானைகளில், விநாயகம் யானையை கடந்த டிசம்பர் 18ம் தேதியன்று பிடித்து, முதுமலை வனப்பகுதியில் விட்டனர்.

இந்நிலையில், மற்றொரு காட்டு யானையான சின்னத் தம்பியை பிடிப்பதற்காக முதுமலை காப்பகத்தில் இருந்து முதுமலை என்ற கும்கியும், பொள்ளாச்சியில் இருந்து கலீம் என்ற கும்கியும் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் சின்னத் தம்பியை பிடித்து விடுவதாக வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்