ஸ்டாலின், தினகரன் மீது அமைச்சர் காமராஜ் புகார்

ஸ்டாலினும், தினகரனும் இணைந்து அ.தி.மு.க.வை ஒழிக்க நினைப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
x
ஸ்டாலினும், தினகரனும் இணைந்து அ.தி.மு.க.வை ஒழிக்க நினைப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  எம்.ஜி .ஆரின் 102 -வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆர். காமராஜ், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் என மொத்தம் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்., தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் ஒரே கோரிக்கை முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது தான் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்