வெளிநாடு செல்ல மறுத்த மைத்துனர் கொலை
பதிவு : ஜனவரி 09, 2019, 07:54 AM
வெளிநாடு செல்ல மறுத்த சகோதரி கணவனை, கார் விபத்து மூலம் மைத்துனர்களே கொலை செய்த சம்பவம் சென்னை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* சென்னை ஆவடியில் முபாரக் அலி என்பவர் டைலர் தொழில் செய்து வந்தார். கடந்த அக்டோபர் 10-ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது  கார் ஒன்று மோதியது. மீட்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி 4 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். ஆனால், போலீசாரின் விசாரணையில் இது விபத்தல்ல, திட்டமிட்ட சதி என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

* துபாயில் இருந்து ஊர் திரும்பிய முபாரக் அலி மீண்டும் வெளநாடு செல்ல மைத்துனர்கள் விசா ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து கணவன்- மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்டு சமாதானம் செய்யவந்த மனைவியின் சகோதரர்கள் வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்தியுள்ளனர்.

* இருதரப்புக்குமான வாக்குவாதம் முற்றியதில், மைத்துனர்களின் காரை முபாரக் அலி கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கோபத்துடன் மோட்டார் சைக்கிளில் வெளியேறிய முபாரக் அலியை பின்தொடர்ந்த மைத்துனர்கள், தங்களது காரால் மோதி தள்ளியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முபாரக் அலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

* இதில், சதக்கதுல்லாவை கைது செய்த போலீசார், மற்றொரு மைத்துனர் அப்துல் ரகுமானை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆவடி : மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஆவடி அருகே, பழுது பார்த்துக் கொண்டு இருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

69 views

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

602 views

ராமலிங்கம் கொலை வழக்கு : கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் மத பிரச்சினை காரணமாக கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

299 views

பிற செய்திகள்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

36 views

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

151 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

12 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

45 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

57 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.