"ஜன. 21-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

திருவாரூர் தொகுதி தவிர தமிழகத்தில் உள்ள மற்ற சட்டமன்ற தொகுதிகளில், வரும் 21ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 21-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
x
* இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்பு அறிவித்த அட்டவணையின் படி, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆனால், புயல் பாதித்த மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள்,வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு,  மேலும் அவகாசம் கோரியதாக கூறப்பட்டுள்ளது.

* இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி தவிர தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், வரும் 21ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்