பவானிசாகர் அணையில் இருந்து ஜன.7 முதல் நீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து வரும் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பவானிசாகர் அணையில் இருந்து ஜன.7 முதல் நீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு வரும் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  இதன்மூலம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என, அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்