பொதுமக்கள் எதிர்ப்பு - வீடுகள் இடிக்கும் பணி நிறுத்தம்

சென்னை ராஜ அண்ணாமலைபுர குடிசை பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பு - வீடுகள் இடிக்கும் பணி நிறுத்தம்
x
சென்னை ராஜ அண்ணாமலைபுர குடிசை பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பங்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ள இளங்கோ நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க பொதுப்பணி, வருவாய் துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன்  சென்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு சென்ற மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ்,அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், எனவே தற்போது இடிக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்