பிளாஸ்டிக் தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு: முழுமையாக தடை விதிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிளாஸ்டிக் தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு: முழுமையாக தடை விதிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 5ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது. இதனை எதிர்த்தும், இது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரியும்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அடங்கிய அமர்வு, சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிப்பதை ஏற்க முடியாது என கருத்து கூறினர். ஒட்டு மொத்தமாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்