"நிவாரண பணிகளுக்கு ரூ.1,401 கோடி ஒதுக்கீடு" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கஜா புயல் நிவாரண பணிகளுக்கு, ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிவாரண பணிகளுக்கு ரூ.1,401 கோடி ஒதுக்கீடு - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
x
கஜா புயல் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரியும், தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு உதவி ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மத்திய அரசின் பேரிடர் மீட்பு நிதியத்திலிருந்து, தமிழகத்துக்கு 353 கோடி வழங்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வழக்கை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்