கஜா நிவாரணம் - ரூ. 353 கோடி ஒதுக்கீடு

கஜா புயல் பாதிப்புக்காக, தமிழகத்துக்கு 353 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கஜா நிவாரணம் - ரூ. 353 கோடி ஒதுக்கீடு
x
கஜா புயல் பாதிப்புக்காக, தமிழகத்துக்கு 353 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு அளித்த  இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய ஆய்வு குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை, விமானப்படை, கடற்படை, கடலோர காவல் படை மூலம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உதவியதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்